உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு மாகாண பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சி ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
99 பார்வைகள்

வடக்கு மாகாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள், மரபுகள் மற்றும் பாரம்பரியச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணப் பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (17.11.2026) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி, தென்மராட்சிக் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமானது.

வடக்கு மாகாணத்தின் பண்பாட்டுச் செழுமையையும் தனித்துவமான அடையாளங்களையும் வெளிப்படுத்துவதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியில் ஓவியங்கள், சிற்பங்கள், கடந்த காலங்களில் மக்கள் தமது அன்றாட வாழ்வியலில் பயன்படுத்திய பாரம்பரிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு மரபுகளையும் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளையும் பிரதிபலிக்கும் இக்காட்சிப்பொருட்களை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பண்பாட்டலுவல்கள் அலகின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சி இன்று மற்றும் நாளை (18.11.2026) ஆகிய இரு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும். வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு மரபுகளையும் அடையாளங்களையும் அறிந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியைப் பார்வையிடுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0