உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இடைநிறுத்தப்பட்ட டித்வா வீட்டுத்திட்ட பணத்தை வழங்க வலியுறுத்தி போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
122 பார்வைகள்

இடைநிறுத்தப்பட்ட டித்வா வீட்டுத்திட்ட பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம மக்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டித்வா வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்ற நிலையில் ஆரம்பதொகை வழங்கி வீட்டுத்திட்டத்தை தாம் ஆரம்பித்த நிலையில் பணம் இடைநிறுத்தப்பட்டதால் கடன்சுமையை எதிர்கொண்டுள்ள நிலையில் தமது மீதி பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர்.

குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய மாவட்டத்திலே டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டம் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறப்பாடுகளின் அடிப்படையிலே கொடுப்பவனவுகள் அந்த அமைச்சினாலே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தற் கடிதத்தின் பிரகாரம், இந்த டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுடைய கோவைகளை சரியான உறுதிப்படுத்தலுடன் மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், துறை சார்ந்த உத்தியோகத்தர்களுடைய சிபார்சுடன் அனுப்பி வைக்கப்படுகின்ற பட்சத்திலே, அதற்கான அனுமதியையும் நிதியையும் விடுவிப்பதற்கு அனைத்துமாக சேவைகள் நிலையம் அதற்கான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கியிருக்கின்றது.

அதன் பிரகாரம் தற்போது பிரதேச செயலாளர்கள் இது தொடர்பிலே அந்த பாதிக்கப்பட்டவர்களுடைய கோவைகளைத் தயாரித்து அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

எனவே இந்த கோவைகள் பகுதி பகுதியாக அந்த அமைச்சிற்குச் சென்ற பின்னர், விரைவில் இந்த நிதி குறித்த பயனாளிகளுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

136 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0