உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய விளையாட்டு விழாவில் சாதனை படைத்த மன்னார் வீராங்கனைக்கு கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
112 பார்வைகள்

இலங்கையின் 50 ஆவது தேசிய விளையாட்டு விழா – 2026 இன் ஒரு அங்கமாக நடைபெற்ற மாகாணங்களுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை L.N.D. திருக்ஷி மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து இன்றைய தினம் திங்கட்கிழமை (16) கௌரவிக்கப்பட்டார்.

குறித்த குத்துச்சண்டைப் போட்டியில் 70 – 75 கிலோகிராம் எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், தனது திறமையை வெளிப்படுத்தி மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், அவரது விளையாட்டுச் சாதனையை பாராட்டி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் குறித்த வீராங்கனையை கெளரவித்து பாராட்டு தெரிவித்தார்.

இதன்போது வீராங்கனைக்கு நினைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அவரது வெற்றி பாராட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

136 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0