உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு வடமராட்சி ஊடக இல்லம் இரங்கல்!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
113 பார்வைகள்

“தமிழ்த் தேசியத்துக்காக அரை நூற்றாண்டு காலம் ஓயாது ஒளிவீசிய விடுதலைச் சுடர் அணைந்தது! அடக்குமுறைகளை உரமாக்கி விடுதலை அரசியலை விழுதெறிந்தோங்கச் செய்த வீரனே நிம்மதியாக உறங்குங்கள்!!”

  • இவ்வாறு தமிழ்த் தேசியச் சிரேஷ்ட அரசியல்வாதி மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழர் விடுதலைக்காக வரலாற்றின் வழியே ஆயுதமேந்திய போராளியாகவும், அரசியல் நீரோட்டத்திலும் அதே கொள்கை வீச்சுடன் தமிழ்த் தேசியப் போராளியாகவும் சுமார் ஐம்பதாண்டு காலம் சமரசமின்றித் தமிழ் மக்களுக்காகக் களமாடிய வீரனே சிவாஜிலிங்கம்.

தமிழர் தேச வரலாற்றில் என்றென்றும் ஒளிவீசும் அணையா விளக்காகப் பிரகாசிக்கும் ஒரு விடுதலைச் சுடரே மறைந்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியலில் என்றும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவால் மீளாத் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0