உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
15 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்”    இரத்ததான முகாம்

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
90 பார்வைகள்

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் “மையோன் எடியுகேசன் எய்ட்” அமைப்பின்  அனுசரணையில், மூன்றாவது முறையாக இரத்ததான முகாம்  இன்று (14) அமைப்பின் காரியாலத்தில் இடம்பெற்றது.

அமைப்பின் தலைவர் எஸ்.எம்.நஸீர் தலைமையில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் முஹம்மட் அஸ்வர், செயலாளர் யு.கே.காலிதீன் ஆகியோரின் வழி நடாத்தலில் இடம்பெறும் இக்குருதிக்கொடை நிகழ்வில் இன, மத பேதமற்ற முறையில் இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு குருதிக் கொடையினை வழங்கினர்.

இந்த குருதிகள் அனைத்தும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக வழங்கப்படுவதோடு, இங்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்  வைத்தியர்  வைத்தியசாலையின் இரத்த வங்கியின் டாக்டர் ஜே. நிரோஜன், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டு குருதிக்கொடையாளர்களிடமிருந்து குருதியினை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் ஸூரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ. ரஃபி, ஜனாஸா மக்கள் பேரவையின் பொதுச் செயலாளர் யூ.கே. காலித்தீன், பொருளாலர் ஏ.எச். முர்சித், முன்னாள் தலைவர் ஏ.ஸ். அஸ்வர், ஸூரா சபையின் உறுப்பினர்கள், பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாஸா மக்கள் பேரவையின் முதுகெழும்பாக செயற்படுகின்ற களப்பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பேரவையின் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பயணாளிகளை இணங்கண்டு அழைத்து வந்து இரத்தம் வழங்குவதற்கு உருதுனையாக இருந்ததை காணக்கூடியாதாக இருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு.!

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்விற்கு அமைவாக சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…

77 0 0
இலங்கை செய்திகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றார்களா?

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றார்களா என இன்று (14.11.2026) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் கேள்வி நேரத்தின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர்…

82 0 0
இலங்கை செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு; நாடாளுமன்றத்தில் கடும் அமளி.!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை நேற்று நள்ளிரவு முதல் திடீரெனப் பெருமளவில் அதிகரித்தமை தொடர்பில், இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும்…

32 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு.!

2027 ஆண்டில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு விசுவமடு மாவீரர் பெற்றோர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்குபடுத்தலில் விசுவமடு சந்தியில் நடைபெற்றது. விசுவமடு புளியடி சந்தையில்…

84 0 0