இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!
நுவரெலியா – தலவாக்கலை (A7) பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இன்று (14) முற்பகல் 11.00 மணியளவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுடன் நுவரெலியா நோக்கிப் பயணித்த பேருந்தொன்றும், எதிர் திசையில் நுவரெலியாவிலிருந்து அக்கரபத்தனை நோக்கிப் பயணித்த பேருந்தொன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





