உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் சிகிச்சை பலனின்றி உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 நாட்கள் முன்
124 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் 35ஆம் கிராமமான கண்ணபுரம் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் பெண்ணொருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி கடந்த 09 தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

59 வயதுடைய காத்திகேசு இராசலெட்சுமி என்பவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 05.11.2026ஆம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில், குறித்த பெண் தனது கணவருடன் மாடுகளைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியுள்ளது.

இதன்போது குறித்த பெண்ணைத் தாக்கிய யானை, அவரைப் பற்றைக்காட்டுக்குள் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளது.

யானையிடமிருந்து தப்பித்துக் கொண்ட கணவர், பின்னர் மனைவியைத் தேடிச் சென்றபோது பற்றைக்காட்டுக்குள் இருந்து அவரது சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, கிராம மக்களின் உதவியுடன் அவர் உடனடியாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று வெள்ளிக்கிழமை (13.11.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

136 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0