நுவரெலியாவில் கன மழை : பல நீர்நிலைகளின் வான் கதவுகள் திறப்பு!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல நீர் தேக்கங்களின் நீர் வெளியேற்றம்.
விமல் சுரேந்திர, லக்சபான,கொன்யோன் , மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் தற்போது வான் பாய்கிறது.
காசல்ரீ மவுஸ்சாகலை ஆகிய இரண்டு நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட இன்னும் 4 அடி நிறைய வேண்டிய நிலையில் உள்ளது.
தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் ஓடைகள் ஆறுகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறிப்பிட்ட சில நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப் படுவதால் களனி கங்கையின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் மகாவலி கங்கையின் கரையோர பகுதிகளில் வாழும் மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


