உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாடு மேய்க்கச் சென்ற நபர் காட்டு யானை தாக்கி உயி@ரிழப்பு

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
139 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் உகன  பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பகுதியில் வனக்காட்டுக்குள் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கிப் பரிதாபமாக உயிரிடைந்துள்ளார்.

மகாகண்டிய கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலகே உபசேன ரத்நாயக்க (வயது 44) என்பவரே இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.

இவர் வழக்கம்போல் தினமும் தனது பசுக்களை அப்பகுதியிலுள்ள வனக்காப்புப் பகுதிக்குள் ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டுஇ மாலையில் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழமையாகும். அதனடிப்படையில் கடந்த 10ஆம் திகதி மாலையும் பசுக்களுடன் வனப்பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளைஇ திடீரென எதிர்ப்பட்ட காட்டு யானை அவரைத் தீவிரமாகத் தாக்கியுள்ளது.

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இவர்இ உடனடியாக மீட்கப்பட்டு அம்பாறை பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும்இ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்   சுஜித் வேதமுல்ல அவர்களின் உத்தரவின் பேரிலும், அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார ரத்நாயக்க அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், அம்பாறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்-2 பண்டார திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையில் உஹானா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், வனவிலங்குத் திணைக்களத்தின் அம்பாறை கள   குழுவினரும் இச்சம்பவம் தொடர்பில் கள ஆய்வுகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறை பிராந்தியத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மனித-யானை மோதல் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

136 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

123 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் ‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை…

147 0 0