உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீதிகள் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புக்கு 9.1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

இலங்கை செய்திகள் 15 நிமிடங்கள் முன்
80 பார்வைகள்

நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும், டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்பதற்கும் மொத்தம் 9.1 பில்லியன் ரூபாய் பெறுமதியான நான்கு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதில், தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 8.33 பில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று ஒப்பந்தங்களும், நாவலப்பிட்டி பகுதியில் சூறாவளியினால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்பதற்காக 763.98 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, வீதி அபிவிருத்திப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன.

  • RR Construction நிறுவனம்: கொழும்பு – இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு வீதியின் 7.55 கிலோமீற்றர் பகுதியை மேம்படுத்த 1,485.79 மில்லியன் ரூபாய்.
  • RR Construction நிறுவனம்: பெல்மதுளை – எம்பிலிப்பிட்டிய – நோனகம வீதியின் 15 கிலோமீற்றர் பகுதியை மேம்படுத்த 3,739.84 மில்லியன் ரூபாய்.
  • Maga Engineering நிறுவனம்: பேராதனை – பதுளை – செங்கலடி வீதியின் 7.04 கிலோமீற்றர் பகுதியை அபிவிருத்தி செய்ய 3,106.21 மில்லியன் ரூபாய்.
  • ELS Construction நிறுவனம்: நாவலப்பிட்டி பகுதியில் டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க 763.98 மில்லியன் ரூபாய்.

தேசிய போட்டி கொள்வனவு நடைமுறையின் கீழ், குறைந்த விலையில் தகுதியான கேள்விகளைச் சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பில் கொட்டித் தீர்க்கும் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய சங்கராஜ மாவத்தை, கெத்தாராம சந்தி…

67 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிவாகை சூடிய யாழ். யூனியன் கல்லூரி வீராங்கனைகளுக்கு அமோக வரவேற்பு!

அகில இலங்கை உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்த யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களுக்கு இன்று (11.11.2026) காலை பெரும் உற்சாக…

69 0 0
இலங்கை செய்திகள்

பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகள் அகற்றும் நடவடிக்கை.!

மாந்தை மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அடம்பன் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பு காணப்பட்ட பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகளை அகற்றும் நடவடிக்கை இன்றைய தினம்…

74 0 0
இலங்கை செய்திகள்

பொருளாதார விரிவாக்கமும் நீண்டகால மாற்றங்களுமே 2027 பட்ஜட்டின் இலக்கு.!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெறும் நலன்புரிச் சலுகைகள் அல்லது வரிச் சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் மதிப்பிடக்கூடாது என்றும், மாறாக அதன் ஒட்டுமொத்த…

79 0 0