உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
84 பார்வைகள்

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக சுமார் 7.02 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற வர்த்தகர் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான கொழும்பைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், நேற்று (10) மாலை விமான நிலைய சுங்கத் திணைக்களம் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவர் டுபாயில் இருந்து மாலை 5.50 மணியளவில் விமான நிலையத்திற்கு பிரவேசித்திருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவரது இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 234 அட்டைப் பெட்டிகளில் (Cartons) இருந்த மொத்தம் 46,800 சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அறிவிப்பதற்கு பொருட்கள் எதுவும் இல்லாத பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பசுமை வழி ஊடாக, இந்த சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகளிடம் அறிவிக்காமல் எடுத்துச் செல்ல அவர் முயன்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சுங்கப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொருளாதார விரிவாக்கமும் நீண்டகால மாற்றங்களுமே 2027 பட்ஜட்டின் இலக்கு.!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெறும் நலன்புரிச் சலுகைகள் அல்லது வரிச் சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் மதிப்பிடக்கூடாது என்றும், மாறாக அதன் ஒட்டுமொத்த…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயலமர்வு.!

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று (11) இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தி, அதில்…

70 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார்…

75 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறை நகர சபை விவகாரம்; குற்றச்சாட்டுகளில் இருந்து தவிசாளர் விடுவிப்பு.!

பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு நிர்வாக, ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை…

78 0 0