தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ரவிராஜின் நினைவேந்தல்.!
மாமனிதர் நடராஜா ரவிராஜின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (10.11.2026) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாமனிதர் நடராஜா ரவிராஜின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன், நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தி அவரின் நினைவுகள் நினைவுகூரப்பட்டன.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், இனத்தின் விடுதலைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜின் நினைவு இன்றும் போற்றப்படுகின்றது.








