பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்.!
தம்பேதென்ன, மக்கந்த பகுதியிலிருந்து அப்புத்தளை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றின் டயர் உடைந்ததில், வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட 10 பேர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





