விபத்தில் சிக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!
அத்துருகிரிய – கொடமக வீதியில், ஹபரகட பகுதிக்கு அருகில் நேற்று (09) மாலை முச்சக்கர வண்டியுடன் உந்துருளி மோதி இடம்பெற்ற விபத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆர்ட்டிகல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தனது உந்துருளியில் கொடமக நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதே திசையில் வந்த முச்சக்கரவண்டி உந்துருளியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளி ஓட்டுநர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அத்துருகிரிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


