உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இயலாமையை மறைக்கவே அடக்குமுறைச் சட்டங்கள்.!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
80 பார்வைகள்

நாட்டின் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழித்து வளமான நாட்டை உருவாக்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அநுர அரசுக்கு, இதற்கு முன்னர் நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின் பணிகளில் துளியளவுகூடச் செய்வதற்குத் திறமையில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.

தமது இயலாமையை மூடிமறைப்பதோடு, வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் ஏற்படும் மக்கள் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காகவே அடக்குமுறைச் சட்டங்கள் ஊடாக அதிகாரத்தைத் தக்கவைக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“உயர் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளுக்கான பல பிரதான வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும், அவற்றுக்கு உரிய காலப்பகுதியில் நியமனங்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசுக்குத் தேவையான முறையிலும் சாதகமான படியும் தீர்ப்புகளை வழங்குமாறு தற்போதைய ஆட்சியாளர்கள் மறைமுக அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

கம்பஹா மற்றும் கல்கிஸை நீதிவான்களின் திடீர் இடமாற்றங்கள் என்பன அரசின் இத்தகைய தலையீடுகளுக்குச் சிறந்த மற்றும் நேரடியான உதாரணங்களாகும். இதன்மூலம் நீதித்துறையின் சுயாதீனம் முற்றாகக் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விவகாரம் மற்றும் அனுராதபுரத்தில் மகா சங்கத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட அநாகரிகமான அடக்குமுறைத் தாக்குதல்கள் மூலம் இந்த அரசு பௌத்த சாசனத்துக்குப் பெரும் துரோகத்தை இழைத்து வருகின்றது. பௌத்த பிக்குகளுக்கு இடையே பிளவுகளை உருவாக்கும் இத்தகைய அநீதியான செயற்பாடுகளுக்கு நாட்டின் ஜனாதிபதியே முழுமையான பொறுப்புக்கூற வேண்டும்.

தற்போதைய அரசு கொண்டுவரத் துடிக்கும் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம்’ போன்ற கடுமையான அடக்குமுறைச் சட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை, உள்நாட்டுப் புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

மக்கள் மத்தியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலேயே, இத்தகைய அடக்குமுறைகள் மூலம் ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்க அரசு முயற்சி செய்கின்றது. ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அரசின் இத்தகைய அடக்குமுறை முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல்…

79 0 0
இலங்கை செய்திகள்

இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான…

82 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

80 0 0
இலங்கை செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

95 0 0