உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசின் தோல்வியால் மீண்டும் நாடு வங்குரோத்து நிலைக்கே.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
86 பார்வைகள்

அரசின் பொருளாதார முகாமைத்துவத்தின் தோல்வி மற்றும் இயலாமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடி நிலையை நோக்கி வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு முறையான மறுசீரமைப்புகள் உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால், கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடு அனுபவித்த இருண்ட பொருளாதாரப் பின்னடைவுக்கும் வங்குரோத்து நிலைமைக்கும் மீண்டும் தள்ளப்படுவதைத் தடுக்க முடியாமல் போகும் என்றும் அவர் எச்சரித்தார்.

மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“தற்போதைய அரசின் பொருளாதார நிர்வாகத் தோல்வி மற்றும் இயலாமை காரணமாக, நாடு மீண்டும் 2022 ஆம் ஆண்டைப் போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆட்சியாளர்களின் திறமையின்மையை மூடிமறைப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் ஊடாக மக்களின் போராட்டங்களை அடக்கும் போக்கிலான அடக்குமுறைச் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது.

அண்மையில் விகாரமஹாதேவி பூங்காவிலும் அனுராதபுர பகுதியிலும் பௌத்த துறவிகளுக்கு எதிராக பொலிஸாராலும் சில தரப்பினராலும் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்த அடக்குமுறை வேலைத்திட்டம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கூட இழக்கப்பட்டு, நாட்டின் ஆடைத் தொழில் உள்ளிட்ட ஏற்றுமதித்துறை கடுமையான ஆபத்துக்குள்ளாகும் அபாயமும் இப்போது உருவாகியுள்ளது. அதேநேரம் நாட்டின் மொத்த பொதுக் கடன் நிலைமை மிகவும் பயங்கரமான வகையில் உயர்ந்துள்ளது.

29.5 டிரில்லியன் ரூபாவாக இருந்த மத்திய அரசின் கடன் தொகை தற்போது 32 டிரில்லியன் வரை உயர்ந்துள்ளது. உள்நாட்டுக் கடன் தொகை 18 டிரில்லியனில் இருந்து 19 டிரில்லியன் வரை அதிகரித்துள்ளது. 11.5 டிரில்லியனாக இருந்த வெளிநாட்டுக் கடன் தொகை தற்போது 12.7 டிரில்லியன் வரை உயர்ந்துள்ளது.
பல்வேறு 12 வகையான வரிகளை உயர்த்தியதன் காரணமாக, நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் 72 வீதத்திலிருந்து 57 வீதமாகக் குறைந்துள்ளனர்.

மேலும், இலங்கை உலகில் அதிக வரி செலுத்தும் நாடாக சர்வதேச சாதனைக்கு நெருங்கியுள்ளது. ஆசியாவில் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளதுடன், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களில் சுமார் 75 வீதம் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

இதுதவிர, பங்குச் சந்தையிலிருந்து 171 மில்லியன் டொலர் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன், பல பிரம்மாண்டமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.

ரணில் விக்கிரமசிங்கவின் அரச காலத்தில் குறைந்திருந்த அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள், தற்போதைய ஆட்சியின் கீழ் பாரியளவில் அதிகரித்துள்ளன. ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஒப்படைக்கும் போது 320 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்று, இன்று 424 ரூபாய் வரை அதிகரித்து 104 ரூபாவால் அதிகரித்துள்ளது. 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் இன்று 490 ரூபாவாகும். 304 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் 397 ரூபா வரை அதிகரித்து 93 ரூபாவால் அதிகரித்துள்ளது.

3 ஆயிரத்து 690 ரூபாவாக இருந்த எரிவாயு சிலிண்டர் இன்று 4 ஆயிரத்து 365 ரூபாவாகும். 292 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விலை இன்று 330 ரூபாவைத் தாண்டி உயர்ந்துள்ளது.

இந்தப் பொருளாதாரத் தரவுகள் மற்றும் நெருக்கடி நிலைமையைத் தவிர்ப்பதற்கு முறையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் சில மாதங்களில் நாடு மீண்டும் 2022 ஆம் ஆண்டில் அனுபவித்த இருண்ட பொருளாதார பின்தங்கிய நிலைமைக்கும் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்படுவதைத் தடுக்க முடியாமல் போகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல்…

79 0 0
இலங்கை செய்திகள்

இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான…

82 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

80 0 0
இலங்கை செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

95 0 0