உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெள்ளப் பாதிப்புக்கு ஜனாதிபதியும் மேயரும் சொந்த நிதியில் நஷ்டஈடு வழங்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
93 பார்வைகள்

கொழும்பில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், கொழும்பு மாநகர மேயர் விராய் கெய்லி பல்தசாரும் தமது சொந்த நிதியிலிருந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் பிரதான காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு 35 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்கக்கூடிய வடிகால் கட்டமைப்பில் 129 மில்லிமீற்றர் மழை பெய்தமையே காரணம் எனக் கொழும்பு மேயர் சாட்டுப் போக்குக் கூறியுள்ளார். ஆனால், கொழும்பில் இதற்கு முன்னர் இதைவிடப் பல மடங்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 1992 ஜூன் 4ஆம் திகதி 494 மில்லிமீற்றரும், 2010 நவம்பர் 10ஆம் திகதி 440 மில்லிமீற்றரும் பலத்த மழை பதிவாகியுள்ளது. அத்துடன் 2005 மற்றும் 2009ஆம் ஆண்டுகளிலும் பல நாட்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது. எனவே, மழைவீழ்ச்சியை மட்டும் காரணமாகக் கூறித் தப்ப முடியாது.

கொழும்பில் முறைப்படி குப்பைகள் அகற்றப்படாமை, வடிகால்கள் மற்றும் சாக்கடைகள் துப்புரவு செய்யப்படாமல் அடைபட்டுள்ளமை, கால்வாய்களை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் மழைநீரை வெளியேற்றும் பிரதான நீரிறைக்கும் இயந்திரங்கள் பல மாதங்களாக இயங்காமல் பழுதடைந்துள்ளமை போன்றவையே இந்தப் பாரிய வெள்ளப்பெருக்குக்கான முதன்மை காரணங்களாகும். இவை தொடர்பான உண்மைத் தகவல்கள் மாநகர சபை வட்டாரங்களிலிருந்தே நேரடியாகக் கிடைத்துள்ளன.

கடந்த 2010ஆம் ஆண்டு கடும் மழையின்போது அப்போதைய நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, குப்பைக் குவியல்களை உடனுக்குடன் அகற்றவும், கால்வாய்களைச் சீரமைக்கவும், சட்டவிரோத நிர்மாணங்களை இரக்கமின்றி அகற்றவும் உடனடி நடவடிக்கை எடுத்தார். இதனாலேயே கொழும்பு நகரம் தூய்மையான நவீன நகரமாக மாற்றப்பட்டது. ஆனால், தற்போதைய ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ திட்டத்தின் கீழ் வடிகால்களையும் குப்பைகளையும் முறையாகப் பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரச அதிகாரிகள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் கடுமையான அலட்சியப் போக்கால் பொதுமக்களுக்குப் பாரிய சொத்து இழப்புகள் ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் தமது சொந்த நிதியிலிருந்தே நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதே நாட்டின் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளிலும் வெளிப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடாகும். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பான வழக்குகளிலும் இத்தகைய தனிப்பட்ட பொறுப்புக்கூறல் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, நாட்டைத் தூய்மைப்படுத்தும் முதன்மைப் பொறுப்பைக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், கொழும்பு நகரின் தூய்மை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்களைத் தடுக்கும் பொறுப்பைக் கொண்ட மேயர் விராய் கெய்லி பல்தசாரும் வெள்ளத்தால் தமது சொத்துக்களை இழந்த மக்களுக்குத் தமது சொந்தப் பணத்திலிருந்து நஷ்டஈடு வழங்க வேண்டும். அவர்களிடம் அதற்குரிய போதிய நிதி இல்லையெனில், நாட்டின் மிகப்பெரிய நிதியமாகக் கூறப்படும் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையக நிதியத்திலிருந்து அதனை வழங்க வேண்டும்.

மழை தெய்வத்துக்கு ஐந்து நாட்களில் 35 மில்லிமீற்றர் மட்டுமே மழை பெய்ய வேண்டும் என முன்கூட்டியே தந்தி அனுப்ப முடியாது. அடுத்த கனமழைக்கு முன்னராவது நகரத்தை வெள்ளப் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கத் தயார்படுத்துவதே ஒரு மேயரின் முதன்மைப் பொறுப்பாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல்…

79 0 0
இலங்கை செய்திகள்

இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான…

82 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

80 0 0
இலங்கை செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

94 0 0