உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
7 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மூன்று முறை சூரியாவை நிராகரித்த பிரபல நடிகை – அம்பலமான உண்மை

சினிமா 2 நாட்கள் முன்
80 பார்வைகள்

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் நஸ்ரியா நடிக்க சம்மதித்தது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
குறித்த திரைப்படம் எதிர்வரும் 6ஆம் திகதி தீபாவளி வெளியீடாக உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சூர்யா, நஸ்ரியாவைத் தனது திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கு நீண்டகாலமாக முயற்சித்ததாகத் தெரிவித்தார்.

இதன்போது, முன்னதாக மூன்று முறை தனது திரைப்படங்களில் நடிக்க நஸ்ரியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் அவர் அவற்றை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டார்.

எனினும், நான்காவது முறையாக ‘சீன்’ திரைப்படத்தில் நடிக்க நஸ்ரியா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும், கதைகளைத் தெரிவு செய்வதில் நஸ்ரியா கொண்டுள்ள தெளிவு மற்றும் உறுதியைப் பாராட்டிய அவர், அவரது இயல்பான நடிப்பையும், சண்டைக் காட்சிகளுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

நஸ்ரியாவை இயல்பான நடிப்புத் திறன் கொண்ட நட்சத்திரம் எனவும் சூர்யா புகழ்ந்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் விஜய் சேதுபதி

சர்வதேச திரையுலகில் இந்தியக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மற்றுமொரு மைல்கல்லை எட்டவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி நியூயோர்க்கில்…

73 0 0
சினிமா

‘சீன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சீன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா,…

63 0 0
சினிமா

கமல்ஹாசனின் மாஸ் அவதாரத்தில் ‘சண்டியர்’ புதிய போஸ்டர் வெளியீடு!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பை அறிவித்து படக்குழு புதிய பதாதையை வெளியிட்டுள்ளது. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ‘சண்டியர்’…

88 0 0
சினிமா

முன்பதிவில் மட்டும் 100 கோடி வசூலை எட்டும் இராமாயணா பாகம் 01!

நீதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘இராமாயணா பாகம் 1’ ஆகும். இந்த திரைப்படம் நாளை…

79 0 0