உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நச்சு வாயுவை சுவாசித்த தம்பதியினருக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
118 பார்வைகள்

நுவரெலியா, மீப்பிலிமனாவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர் மூடிய அறைகளுக்குள் பார்பிகியூ (Barbecue – BBQ) இயந்திரங்களை பயன்படுத்திய போது நச்சு வாயுவை சுவாசித்ததால் இன்று அதிகாலை உயிரிழந்தாக நுவரெலியா பிரதேச உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்தார்.

அவிசாவளையை சேர்ந்த அத்தம்பதியினர், நுவரெலியா, மீப்பிலிமனாவில் ஒரு சுற்றுலா விடுதியின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அந்த விடுதி கட்டி முடிக்கப்படும் வரை அவர்கள் தற்காலிகமாக அருகிலுள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கியுள்ளனர்.

நுவரெலியா பகுதியில் நிலவிய கடும் குளிரின் காரணமாக, அத்தம்பதியினர் அறையில் பார்பிக்யூ அடுப்பு எரிந்துகொண்டிருக்க உறங்கச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை, உறவினர்கள் அத்தம்பதியினரின் தொலைபேசிக்கு அழைத்தபோதும், அவர்கள் அழைப்புகளுக்குப் பதிலளிக்காததால், அப்பகுதி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்த போது இருவரும் உயிரிழந்து கிடப்பதைக் கண்டதும், அவர் நானுஓயா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

உயிரிழந்த தம்பதியினரில் கணவர் கப்பலின் கேப்டன் என்றும், அவருக்கு 52 வயது என்றும், அவரது மனைவிக்கு 46 வயது என்றும் பார்பிக்யூ செய்து சாப்பிட்டுவிட்டு அடுப்பை அணைக்காமல் உறங்கியதால் இந்த விபரீதம் நிகழ்ந்திருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் நானுஓயா காவல் நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

நுவரெலியா செல்லும் சுற்றுலா பயணிகள், பார்பிக்யூ சமைத்த பிறகு அல்லது குளிருக்காக அந்த அடுப்பை மூடிய அறைக்குள் வைத்து உறங்கும் போது பார்பிக்யூவில் உள்ள கரிகள் அல்லது நிலக்கரி முழுமையாக எரியாதபோது, நிறமற்ற, மணமற்ற ஆபத்தான கார்பன் மோனாக்சைடு வாயு வெளியாகிறது. மூடிய அறைக்குள் இந்த வாயு பரவும்போது சுவாசிப்பவர்களுக்குத் தெரியாமலேயே மயக்கம் ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0