உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மழைக்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் கடும் அவதி.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
114 பார்வைகள்

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலங்களில் செல்லும் நோயாளர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போது பிராந்தியத்தில் மாரிகால மழை ஆரம்பித்துள்ள நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை வளாகத்தினுள்ளும், வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான அணுகுபாதைகளிலும் மழைநீர் வடிந்தோட வழியின்றி அதிகளவில் தேங்கி நிற்கின்றது.

முறையான வடிகான் அமைப்பு இன்மையாலும், நீர் வழிந்தோடும் பாதைகள் அடைபட்டுள்ளமையால் தேங்கி நிற்கும் வெள்ளநீர் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார், முதியவர்கள் மற்றும் தீவிர நோயாளிகள் நடந்து செல்ல முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரினால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதுடன், வைத்தியசாலைச் சூழலில் கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது.

நீண்டகாலமாகத் தொடரும் இப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டும் அப்பகுதி மக்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, வைத்தியசாலை வளவில் தேங்கும் மழைநீரை அகற்றி, சீரான வடிகான் அமைப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தீவிரமாகக் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

93 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

122 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

134 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

129 0 0