உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்கள் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
116 பார்வைகள்

நாட்டிலிருந்து இணையதளம் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்கள் குழுவொன்று கொழும்பு, மருதானை டெக்னிகல் சந்தி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 சீன நாட்டவர்களும், 6 பங்களாதேஷ் நாட்டவர்களும், மூன்று இந்திய நாட்டவர்களும் அடங்குகின்றனர்.

பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை டெக்னிகல் சந்தைப் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன், அதில் தொடர்புடைய 21 வெளிநாட்டவர்கள் இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் குறித்த கட்டிடத்தில் இருந்து முன்னெடுத்த ஒன்லைன் மோசடிகளின் தன்மை மற்றும் அவற்றின் வலையமைப்பு குறித்து பொலிஸார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கவின் வழிகாட்டுதலில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

93 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

122 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

134 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

129 0 0