சாரதி பயிற்சி பாடசாலையின் உரிமையாளர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரை.!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் பகுதியில் தனியார் சாரதி பயிற்சி பாடசாலையின் உரிமையாளர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, சிற்றூர்தி, உந்துருளி என பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


