உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து விடை பெற்றார் மெஸ்ஸி

விளையாட்டுச் செய்திகள் 18 மணி நேரம் முன்
64 பார்வைகள்

ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி, கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெற்றார்.

பெனின் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியே ஆர்ஜென்டினா அணிக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியாக அமைந்தது.

21 ஆண்டுகளுக்கும் மேலான அவரது சர்வதேச பயணம் உணர்ச்சிகரமான முறையில் நிறைவடைந்தது.

பியூனஸ் அயர்ஸில் உள்ள மானுமென்டல் மைதானத்தில் 85,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்ட நிலையில், மெஸ்ஸிக்கு பிரமாண்டமான பிரியாவிடை அளிக்கப்பட்டது.

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும், ரசிகர்களை நோக்கி விடைபெற்றபோதும் மெஸ்ஸி கண்ணீர் சிந்தினார்.

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா 3–0 என்ற கணக்கில் பெனினை வீழ்த்தியது.

மெஸ்ஸி ஒரு கோல் அடித்ததுடன், இரண்டு கோல்களுக்கு உதவியும் செய்தார்.

ஆர்ஜென்டினாவுக்காக 208 போட்டிகளில் 125 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, 2022 உலகக் கிண்ணம், இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்கள் உள்ளிட்ட முக்கியமான சர்வதேச வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

மைதானத்திற்குள் மெஸ்ஸியின் 10-ம் எண் கொண்ட பிரமாண்டமான அர்ஜென்டினா ஜெர்சி வைக்கப்பட்டிருந்தது. அதில் “Gracias” (நன்றி) என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது.

தனது மூன்று மகன்களுடன் மைதானத்திற்குள் நுழைந்த மெஸ்ஸி, ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டார்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. ஆர்ஜென்டினா பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனியும் அந்த தருணத்தில் உணர்ச்சிவசப்பட்டார்.

போட்டியின் 10-வது நிமிடத்தில் ஆட்டம் சில நொடிகள் நிறுத்தப்பட்டது. ஆர்ஜென்டினா அணியின் புகழ்பெற்ற 10-ம் எண் ஜெர்சியை குறிக்கும் வகையில், மைதானத்தில் இருந்த 85,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் எழுந்து நின்று மெஸ்ஸிக்கு நீண்ட நேரம் கைதட்டி மரியாதை செலுத்தினர்.

மெஸ்ஸி ஆர்ஜென்டினா சீனியர் அணிக்காக 2005ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பிறகு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அந்த அணியின் மிகப்பெரிய நட்சத்திரமாக திகழ்ந்தார்.

ஆர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகவும், அதிக கோல்கள் அடித்த வீரராகவும் அவர் தனது சர்வதேச பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

கடைசி போட்டிக்கு முன்பு 207 ஆட்டங்களில் 125 கோல்கள் அடித்திருந்த அவர், பெனினுக்கு எதிரான போட்டியில் மேலும் ஒரு கோல் அடித்து தனது எண்ணிக்கையை 126 ஆக உயர்த்தினார்.

மெஸ்ஸியின் சர்வதேச வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக 2021ஆம் ஆண்டு அமைந்தது. பிரேசிலுக்கு எதிராக நடைபெற்ற கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.

அதன்பின்னர் 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆர்ஜென்டினாவை சாம்பியனாக்கி, தனது நீண்டகால கனவை மெஸ்ஸி நிறைவேற்றினார். இதன் மூலம் ஆர்ஜென்டினா ரசிகர்களின் பார்வையில் அவரது இடம் மேலும் உயர்ந்தது.

அதனைத் தொடர்ந்து 2024 கோபா அமெரிக்கா பட்டத்தையும் ஆர்ஜென்டினா வென்றது. உலகக் கோப்பை மற்றும் இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்கள் உள்ளிட்ட முக்கிய சர்வதேச கோப்பைகளை வென்ற வீரராக மெஸ்ஸி விடைபெற்றுள்ளார்.

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து மெஸ்ஸி முன்பே தனது முடிவை அறிவித்திருந்தார்.

“நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இனி கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை” என்ற உணர்வுபூர்வமான வார்த்தைகளுடன் அவர் தனது சர்வதேச பயணத்தை முடிக்க முடிவு செய்தார்.

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றாலும், மெஸ்ஸியின் கால்பந்து பயணம் உடனடியாக முடிவடையவில்லை. அவர் தொடர்ந்து இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆனால் இனி ஆர்ஜென்டினா ஜெர்சியில் 10-ம் எண் மெஸ்ஸி களமிறங்குவதை ரசிகர்கள் பார்க்க முடியாது. ஒரு தலைமுறையின் கால்பந்து பயணம் முடிவுக்கு வந்த நிலையில், ஆர்ஜென்டினா அணியில் அடுத்த 10-ம் எண் நட்சத்திரம் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கு சமரி அத்தபத்து பரிந்துரை!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடந்த…

49 0 0
விளையாட்டுச் செய்திகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்

ஸ்மிருதி மந்தனா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் அனைத்து வடிவங்களிலும் தலைமை பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த மாற்றம்…

66 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஈட்டி எறிதலில் எனக்கு இவர்தான் குரு : ருமேஷ் பத்திரகே நெகிழ்ச்சி!

ஈட்டி எறிதல் விளையாட்டில் உலகின் முதன்மை நிலை வீரரான இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே , ஜெர்மனியின் ஒலிம்பிக் சாம்பியனான தோமஸ் ரோலரை (ஈட்டி எறிதலில் எனக்கு…

86 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் ஆடவர் அணிகளை…

73 0 0