உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
107 பார்வைகள்

நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பதிவு செய்தலுக்கான சட்டமூலத்தின் சில சரத்துகளைத் திருத்த வேண்டும் என அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் தமது எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளனர். 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ‘மனிதநேய முறையில் விலங்குகளின் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான கால்நடை வைத்தியர்கள் கூட்டமைப்பின்’ அழைப்பாளர் வைத்தியர் சமித் நாணயக்கார, குறித்த அறிக்கை தொடர்பில் தாம் கவலையடைவதாகத் தெரிவித்தார். 

நீர் வெறுப்பு நோயை ஒழிப்பதில் இரண்டு பகுதிகள் உள்ளதாகவும், அதில் விலங்கு நோய்கள் மற்றும் விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பது குறித்துக் கால்நடை வைத்தியர்களே கற்றுள்ளதாகவும், மனிதர்களுக்குச் சிகிச்சை அளிப்பது குறித்து வைத்தியர்களே கற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வைத்திய பீடங்களில் வைத்தியர்களுக்கு விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பது கற்பிக்கப்பட்டிருந்தால் அல்லது அவர்கள் கால்நடை வைத்திய சபையில் பதிவு செய்திருந்தால் இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் வைத்தியர் இங்கு குறிப்பிட்டிருந்தார். 

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த கால்நடை வைத்தியர்கள் கூட்டமைப்பின் அழைப்பாளர் வைத்தியர் சமித் நாணயக்கார, 

“இந்த ரேபிஸ் நோயை ஒழிப்பதில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று விலங்கு ரேபிஸ் நோயை ஒழிப்பது, மற்றையது மனித ரேபிஸ் நோயை ஒழிப்பது. பல்கலைக்கழகங்களில் விலங்கு நோய்கள் மற்றும் விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பது குறித்துக் கற்றவர்கள் கால்நடை வைத்தியர்களான நாங்களாகும். மனிதர்களுக்கு மருந்தளிப்பது மற்றும் மனிதர்கள் தொடர்பில் கற்றவர்கள் வைத்தியர்களாவர். 

இருப்பினும், தற்போது இங்கு ஒரு சிறிய முரண்பாடு காணப்படுகிறது. அதாவது நாய்கள் தொடர்பான திட்டங்களைச் செய்யவும் சுகாதார அமைச்சில் உள்ள வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினரே முன்வந்துள்ளனர். வைத்தியர்களாகிய நாங்கள் எங்கள் தொழிலைப் பற்றிப் பேசும்போது மற்றும் தொழிலுக்காகப் போராடும்போது, மற்றவர்களின் தொழில்சார் கண்ணியத்தைப் பற்றியும் பேச வேண்டியது அவசியமாகும். 

வைத்தியப் பீடத்தில் வைத்தியர்களுக்கு விலங்குகளுக்குச் சிகிச்சை அளிக்கும் முறை கற்பிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வைத்தியர்கள் கால்நடை வைத்திய சபையில் பதிவு செய்திருந்தாலோ இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இப்போது இங்கு ஒரு முரண்பாடே நிலவுகிறது. கால்நடை வைத்தியர்களாகிய நாங்கள் ஒருபோதும் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கச் செல்வதில்லையே. கொரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தவும் நாங்கள் செல்லவில்லை. ஏனெனில் எங்களது கடமை என்ன என்பதை நாங்கள் சரியாக அறிந்துள்ளோம். 

எனவே, தமது தொழில்சார் உரிமைகளுக்காகப் பேசும் ஓர் அமைப்பு என்ற ரீதியில், அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட்டமை குறித்து நாங்கள் உண்மையில் கவலையடைகிறோம். வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக, சுகாதார வைத்திய அதிகாரி (MOH) வைத்தியர்களுக்கும் அந்த மேற்பார்வைக் கடமைகளை ஒப்படைக்குமாறு அவர்கள் கூறுகிறார்கள். அது மிகவும் வேடிக்கையான கதையாகும்” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி உடையில் கை வைத்து தவறிழைத்துள்ளது அநுர அரசு : சஜித் விமர்சனம்!

“தற்போது பல்வேறு வழிகளில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே மோதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மத வேறுபாடு, மதவாதம், இன வேறுபாடு மற்றும் இனவாதம் என்பன ஒரு புற்றுநோயாகும். இந்தப்…

70 0 0
இலங்கை செய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபானசாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை தடுக்கம்கோரிய தீர்மானம் வலி வடக்கு பிரதேசசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்று(15) இடம்பெற்ற சபை அமர்வில் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு…

43 0 0
இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

54 0 0