உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய சட்டமூலம் தொடர்பில் GMOA குற்றச்சாட்டு

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
61 பார்வைகள்

நாய்களுக்கு விசர் நாய்க்கடி  (Rabies) தடுப்பூசி ஏற்றுவது மற்றும் பதிவு செய்வது தொடர்பான புதிய சட்டமூலத்தின் சில சரத்துக்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியுள்ளது. 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் லசித கன்னங்கர இதனைத் தெரிவித்தார். 

விசர் நாய்க் கடி நோயை முற்றாக ஒழிப்பது மற்றும் நாய்களைப் பதிவுசெய்வதற்காகப் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சட்டமூலமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

நாய்களுக்குத் தடுப்பூசி ஏற்றுதல், நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வர்த்தக நோக்கில் நாய்களை இனப்பெருக்கம் செய்வதை முறைப்படுத்துதல் ஆகியவை இந்தச் சட்டமூலத்தின் பிரதான நோக்கங்களாகும். 

மேலும், உள்ளூராட்சி நிர்வாக எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு நாய்க்கும் ஆண்டுதோறும் விசர் நாய்க்கடி நோய் தடுப்பூசி ஏற்றுவதும், அதனைப் பதிவு செய்வதும் இந்தச் சட்டமூலத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இந்தச் சட்டமூலத்தின் 4 ஆம் சரத்தின்படி, கால்நடை மருத்துவர் ஒருவரால் அல்லது அவரது நேரடிக் கண்காணிப்பின் கீழ் மட்டுமே நாய்களுக்கு விசர் நாய்க்கடி நோய் தடுப்பூசியைச் செலுத்த முடியும். 

நாட்டில் நிலவும் கால்நடை மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் இந்த நிபந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டால், விசர்நாய்க் கடி நோய் மரணங்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் தேசிய வேலைத்திட்டத்துக்குப் பாரிய அச்சுறுத்தலும் பின்னடைவும் ஏற்படக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

81 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0