உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

“மக்களுக்குச் சுமையற்ற வலுசக்தி சந்தை உருவாக்கப்படும்” – ஜனாதிபதி

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
85 பார்வைகள்

வலுசக்தி சந்தையில் வலுவான அரச பங்கைப் பேணி, மக்களுக்குச் திறம்பட சேவையாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அதனை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமான முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

தற்பொழுது இலங்கையில் மக்களுக்கு சுமையாக இல்லாத, வலுவான வலுசக்திச் சந்தையொன்று கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஜெட் A-1 குழாய் கட்டமைப்பு மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC), இலங்கை பெட்ரோலியக் சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) ஆகியவற்றிற்குரிய புதிய எண்ணெய் தாங்கி சேமிப்புத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகளை இன்று (2) முற்பகல் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், விநியோகச் செலவைக் குறைத்தல் மற்றும் எதிர்கால தேவைக்கான கொள்ளளவை அதிகரித்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு முத்துராஜவெலவுக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையே 21 கிலோமீற்றர் நீளமான விசேட நிலத்தடி குழாய் கட்டமைப்பும் தாங்கித் தொகுதியும் நிர்மாணிக்கப்படுகின்றன. 

30 மாதங்களில் நிறைவடையும் இந்தத் திட்டத்தின்கீழ், 92,000 கனமீற்றர் மொத்த கொள்ளளவு கொண்ட ஐந்து புதிய ஜெட் ஏ-1 எரிபொருள் தாங்கிகள் அமைக்கப்படவுள்ளன. 

அத்துடன், பெட்ரோலியக் சேமிப்பு முனைய நிறுவனத்தால் முத்துராஜவெல முனையத்தில் 40,000 கன மீற்றர் மேலதிக சேமிப்புக் கொள்ளளவு கொண்ட 3 புதிய தாங்கிகளை அமைக்கும் பணிகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டன. 18 மாத ஒப்பந்தக் காலத்தைக் கொண்ட இந்த திட்டம் 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவடையவுள்ளது. 

சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்திகள், நாட்டின் எரிபொருள் கையிருப்புகளை வலுப்படுத்தவும், அதிகரித்து வரும் வலுசக்தி தேவைகளைத் தடையின்றிப் பூர்த்தி செய்யவும் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி உடையில் கை வைத்து தவறிழைத்துள்ளது அநுர அரசு : சஜித் விமர்சனம்!

“தற்போது பல்வேறு வழிகளில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே மோதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மத வேறுபாடு, மதவாதம், இன வேறுபாடு மற்றும் இனவாதம் என்பன ஒரு புற்றுநோயாகும். இந்தப்…

71 0 0
இலங்கை செய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபானசாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை தடுக்கம்கோரிய தீர்மானம் வலி வடக்கு பிரதேசசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்று(15) இடம்பெற்ற சபை அமர்வில் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு…

44 0 0
இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

54 0 0