உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொக்குத்தொடுவாய் உப்பள விவகாரம்: சட்ட நடவடிக்கை கோரிக்கை

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
75 பார்வைகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்கால்வெளி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள உப்பளத்திற்கு எதிராக மகாவலி அதிகாரசபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (01) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குஞ்சுக்கால்வெளி பகுதியில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் துணையுடன் 44.197 ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கப்பட்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இதில் 13 ஏக்கர் 02 ரூட் அரச காணிகளாகவும், 31 ஏக்கருக்கும் அதிகமானவை தனியார் காணிகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதி வெலிஓயா பிரதேச செயலகத்திற்குட்பட்டது என மகாவலி அதிகாரசபை தெரிவித்து வந்த நிலையில், நிலஅளவைத் திணைக்களத்தின் சுவட்டு வரைபடத்தின் மூலம் அது கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த காணிகளில் பெரும்பகுதி தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் என ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், சட்டவிரோத உப்பளச் செயற்பாடுகளுக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட செயலகத்தின் காணிப்பிரிவினால் திரட்டப்பட்டுள்ளதாகவும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையுடன் கலந்துரையாடி சட்டவிரோத உப்பளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் காணிக்குரிய மேலதிக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

81 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0