உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொகவந்தலாவையில் திடீர் மினி சூறாவளி மழை

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
72 பார்வைகள்

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் இன்று (02) திடீரென சுமார் ஒரு மணிநேரம் மினி சூறாவளி போன்ற கடும் மழை பெய்துள்ளது.

எவ்வித முன்னெச்சரிக்கை அறிகுறிகளும் இன்றி ஏற்பட்ட இந்த திடீர் காலநிலை மாற்றத்தின்போது, தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணித் தொழிலாளி ஒருவர், மழையில் நனைந்தவாறே தன்னையும் வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதுகாத்துக்கொள்ள வீட்டை நோக்கி அவசரமாக சென்றுள்ளார்.

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் ஆற்றங்கரைகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு திடீர் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் செயலிகள் அல்லது விசேட அறிவிப்பு முறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவது போன்று, நாட்டுக்கு நீண்டகாலமாக அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்டத் தேயிலைத் தொழிலாளர்களும் திடீர் காலநிலை மாற்றங்களால் விபத்துகள் மற்றும் ஆபத்துகளுக்கு முகங்கொடுத்து வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, பெருந்தோட்டப் பகுதிகளில் காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆபத்தான சூழ்நிலைகளில் தொழிலாளர்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

81 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0