உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மார்ச் 31 முதல் சாரதிகளுக்கு புள்ளி இழப்பு முறைமை!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
77 பார்வைகள்

கொழும்பு, ஒக்டோபர் 2 – சாரதிகளின் வீதி ஒழுக்கத்தை மேம்படுத்தி, வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாரதிகளுக்கான புள்ளி இழப்பு (De-merit) முறைமை, அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி முதல் நாடு முழுவதும் முழுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்துப் பொறுப்புக்கான பிரதி பொலிஸ் அதிபர் W.P.J. சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த முறைமையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ், போக்குவரத்து அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) மற்றும் அரச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளும் விசேட நிபுணர் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இத்திட்டம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அபராதம் செலுத்தும் சாரதிகள் தங்களது ஸ்மார்ட்போன்கள் ஊடாக தற்போதைய புள்ளி நிலை மற்றும் குறைக்கப்பட்டுள்ள புள்ளிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய சோதனை முறைமையும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன், இந்த முறைமையை சட்டரீதியாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தற்போதைய சட்ட விதிகள் மற்றும் தொடர்புடைய ஏற்பாடுகள் சட்டக் குழுவொன்றினால் மீளாய்வு செய்யப்பட்டு, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புள்ளி இழப்பு முறைமை முழுமையாக அமுல்படுத்தப்படுவதன் மூலம் சாரதிகள் மத்தியில் சுய ஒழுக்கமும் பொறுப்புணர்வும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீதி விதிகளை மீறுவதன் மூலம் புள்ளிகளை இழக்க நேரிடும் என்ற அச்சுறுத்தலின் காரணமாக சாரதிகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து பொறுப்புடன் வாகனங்களை செலுத்துவார்கள் எனவும், இதன் மூலம் நாட்டில் இடம்பெறும் கடுமையான வீதி விபத்துகள் மற்றும் அவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும் பிரதி பொலிஸ் அதிபர் W.P.J. சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

81 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0