உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
136 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

இன்று அவர் கொழும்பு, ஜாவத்தை வீதியிலுள்ள லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

2007 ஆம் காலப்பகுதியில் வர்த்தக, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக பந்துல குணவர்தன பதவி வகித்த காலத்தில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில அமைச்சரவைத் தீர்மானங்கள் மற்றும் அது தொடர்பான நிதி நடைமுறைகள் குறித்து எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறித்த அமைச்சரவை முடிவு தொடர்பாக அவரிடம் பல மணிநேரம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற கடந்தகால நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத தீர்மானங்கள் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விரிவான விசாரணைகளின் ஒரு அங்கமாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0