உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதான அலுவலகம் திறப்பு

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
92 பார்வைகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் மாவட்ட பிரதான அலுவலகம் இன்று (2) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

மன்னாரில் இதுவரை உப அலுவலகமாக இயங்கி வந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம், இன்று முதல் மாவட்ட பிரதான அலுவலகமாகத் தரம் உயர்த்தப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா தலைமையில் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட மக்கள் மனித உரிமைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக இதற்கு முன்னர் வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் நீண்ட தூரப் பயணம், போக்குவரத்துச் செலவு மற்றும் நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மன்னாரிலேயே மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை, மக்கள் தங்களது மனித உரிமைகள் தொடர்பான முறைப்பாடுகளை இலகுவாக முன்வைப்பதற்கும், உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவும் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திறப்பு நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் G.P.D. பெர்னாண்டோ, ஜெயதிலக்க இந்திக, நிதிப் பிரிவு அதிகாரி லால் வீரசிங்க, விசாரணை மற்றும் புலனாய்வுப் பணிப்பாளர் கபிலன் வில்வராஜன், காலிஸ்டஸ் அருணகுமார, சட்ட உத்தியோகத்தர் மற்றும் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் உத்தியோகத்தர் M.T.M. இர்ஷாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், இலங்கை இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

76 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

82 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

60 0 0