உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அக்கரப்பத்தனை வெவரளி தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
76 பார்வைகள்

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவரளி தோட்டத்தின் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (2) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர், ஆடலி மற்றும் தோட்டம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு கிலோ கொழுந்துக்கு 90 ரூபாய் என்ற அடிப்படையில் தேயிலை கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும், அதற்கேற்ப கொடுப்பனவு வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்ததாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள், வெவரளி தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

இதனிடையே, எதிர்வரும் திங்கட்கிழமை தொழிலாளர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் மூலம் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், போராட்டத்தை தொடரவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0