உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளுக்குத் தடை?

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
98 பார்வைகள்

எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான அரபு அரசியல் கூட்டணிகளான ‘கூட்டுப் பட்டியல்’ (Joint List), ‘ரா அம்’ (Ra’am) மற்றும் தனிப்பட்ட சில வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்த மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இஸ்ரேல் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

ஆயுதமேந்திய போராட்டங்களுக்கு ஆதரவளித்தனர் மற்றும் இஸ்ரேலை யூத அரசாக அங்கீகரிக்க மறுக்கின்றனர் எனக் குற்றம்சாட்டி, தீவிர வலதுசாரி அமைச்சரான இடாமர் பென் க்வீர் உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகளால் கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி இந்தத் தகுதிநீக்கத் தீர்மானம் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

அரபுச் சமூகத்தின் வாக்களிப்பைப் பலவீனப்படுத்தி, நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முடக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும் என குறிப்பிடப்படுகிறது.

அரசியல்வாதிகளைக் கொண்ட மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் இந்தத் தீர்மானம் சட்டப்படி உடனடியாகச் செல்லுபடியாகாது என்பதால், விசேட நீதியரசர்கள் அமர்வு இதன் செல்லுபடித் தன்மையை ஆராய்ந்து வருகிறது.

கடந்த காலங்களைப் போலவே இம்முறையும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த தடை உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்யும் என அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

75 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

85 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்! ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் எச்சரித்துள்ளார். ‘USS Theodore Roosevelt’ விமானம் தாங்கிப்…

101 0 0
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 5.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று (1) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இந்திய நேரப்படி காலை 6:59 அளவில் பதிவாகியுள்ளதுடன்,…

79 0 0