உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக தொடரும் அமைதி வழிப் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
79 பார்வைகள்

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீள அவ்விடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்று வரும் அமைதி வழிப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலையுடன் தற்காலிகமாக நிறைவுக்கு வருகின்றது.

நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டு நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டு வந்த அவரது சிலையானது கடந்த மாதம் 27ஆம் திகதி முற்பகல் 6:30 மணியளவில் பொலிஸாரால் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு எதிராக ‘அணையா விளக்கு’ ஏற்றப்பட்டு அமைதி வழிப் போராட்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கியது. இதன் இரண்டாம் நாள் போராட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

நேற்று முற்பகல் 9 மணியளவிலும், பிற்பகல் 5 மணியளவிலும் தியாக தீபத்தின் நினைவுத்தூபியில் மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டம் இன்று மாலையுடன் தற்காலிகமாக நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0