உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
95 பார்வைகள்

மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் மரைன் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டதுடன் வாகன சாரதி கைது செய்யப்பட்டு சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் வேதாளை கடற்கரையில் கிடந்த 286 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி, மண்டபம், மரைக்காயர்பட்டினம், குந்துகால், வேதாளை, களிமண் குண்டு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் கடத்துவதற்கு வலி நிவாரணி மாத்திரைகள் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையில் பொலிஸார் உச்சிப்புளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரிடம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகள் அனைத்தும் மண்டபம் அடுத்த வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் சரக்கு வாகனத்துடன் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த மரைன் பொலிஸார் வாகன ஓட்டுநரை கைது செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து பின்னர் வாகனம், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் மண்டபம் மரைன் பொலிஸார் ஒப்படைத்தனர்.

மேலும் வேதாளை கடற்கரையில் சட்டவிரோத கடத்தல் சம்பவம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நள்ளிரவு மரைன் பொலிஸார் கடற்கரை ஓரம் திடீர் ரோந்து சென்ற போது கடத்தல்காரர்கள் மரைன் பொலிஸார் வருவதை கண்டதும் கடற்கரையில் 286 கிலோ எடை கொண்ட 10 பீடி இலை பண்டல்களை கடற்கரை ஓரம் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்த மரைன் பொலிஸார் அதனையும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

46 0 0
இந்திய செய்திகள்

தமிழ்நாட்டில் அறிமுகமான தானியங்கி சுங்கச்சாவடி !

தமிழ்நாட்டில் முதல்முறையாக பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல், தானியங்கி முறையில் இயங்கும் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை (MLFF) நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக வார இறுதி…

88 0 0
இந்திய செய்திகள்

“மகளிருக்கான வெற்றிப் பயணத்தை” இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.சாதாரண நகர அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக…

94 0 0
இந்திய செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு

தமிழகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, தமிழகத்தில் நிலவும் நிர்வாகச் சூழல் மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் செயற்பாடுகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு…

77 0 0