உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் விவசாய நடவடிக்கைகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
77 பார்வைகள்

இலங்கை தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தினால் 10 வருடங்களுக்கு ஒரு முறை முன்னெடுக்கப்படுகின்ற குடிசன தொகை மதிப்பீட்டின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற பொருளாதார கணக்கெடுப்பின் முதலாவது நடவடிக்கையாக விவசாய நடவடிக்கைகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (1)வியாழக்கிழமை காலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் பெரிய கடை கிராம அலுவலர் பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

குறித்த ஆரம்ப நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மன்னார் மாவட்ட புள்ளி விபர திணைக்கள அதிகாரிகள், விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் உள்ளடங்களாக திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வை தொடர்ந்து பெரிய கடை கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற அதிகாரிகள் பதிவுகளை வைபவ ரீதியாக ஆரம்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

76 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

82 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

60 0 0