உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

174 உயிர்களைக் காப்பாற்றிய அவர் ஒரு உண்மையான ஹீரோ: நெதன்யாகு பாராட்டு!

உலக செய்திகள் 3 நாட்கள் முன்
92 பார்வைகள்

டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘flydubai (FZ1073)’ வானூர்தியை விபத்துக்குள்ளாக்க முயன்ற இணை விமானியுடன் போராடி, 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) அவர்களின் “விவரிக்க முடியாத வீரத்தை” இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

வானூர்தி காக்பிட்டில் (Cockpit) இணை விமானி கூரான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதிலும், வானூர்தியின் அமைப்புகளைச் சேதப்படுத்தி வானூர்தியை கீழே வீழ்த்த முயன்றபோதும், படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் அவரோடு தைரியமாகப் போராடினார்.

பின்னர் காக்பிட் கதவைத் திறந்து, பயணிகள் மற்றும் பிற ஊழியர்கள் இணை விமானியை மடக்கிப் பிடிக்க உதவியுள்ளார்.

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து வானூர்தி சவூதி அரேபியாவின் தபூக் (Tabuk) வானூர்தி நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்பொழுது அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காணொளி செய்தி வெளியிட்ட பிரதமர் நெதன்யாகு,

“கடுமையான காயமடைந்த போதிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் காட்டிய தைரியம் ஒரு பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளது.

174 உயிர்களைக் காப்பாற்றிய அவர் ஒரு உண்மையான ஹீரோ. அவருக்கு எனது வீரவணக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

76 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

85 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளுக்குத் தடை?

எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான அரபு அரசியல் கூட்டணிகளான ‘கூட்டுப் பட்டியல்’ (Joint List), ‘ரா அம்’ (Ra’am)…

98 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்! ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் எச்சரித்துள்ளார். ‘USS Theodore Roosevelt’ விமானம் தாங்கிப்…

101 0 0