உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வானத்தில் விமானிகள் இடையே மோதல் – சவுதியில் அவசரமாகத் தரையிறங்கிய இஸ்ரேலிய வானூர்தி!

உலக செய்திகள் 3 நாட்கள் முன்
76 பார்வைகள்

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி பயணித்த ஃப்ளைடுபாய் பயணிகள் வானூர்தி ஒன்று, அவசரநிலை காரணமாக சவுதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை துபாயிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குறித்த வானூர்தி அவசரநிலை எச்சரிக்கை சமிக்ஞையை வெளியிட்டதாக வானூர்திக் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

வானூர்தியில் இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக சவுதி அரேபியாவின் தபூக் வானூர்தி நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஃப்ளைடுபாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வானூர்தியில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

வானூர்தியில் இருந்த இரண்டு விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என இஸ்ரேலிய ஊடகங்கள், அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, வானூர்தி கண்காணிப்பு தரவுகளின்படி, வானூர்தி 34 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து இரண்டு நிமிடங்களுக்குள் 17 ஆயிரம் அடிக்கும் குறைவான உயரத்துக்கு திடீரென இறங்கியுள்ளது.

வானூர்தியின்; முன்பகுதியில் இருந்து கூச்சல் சத்தங்கள் கேட்டதாகவும், விமானிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து தாங்கள் கேட்டதாகவும் பயணிகள் கூறியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியாவில் வானூர்தி தரையிறங்குவதற்கு முன்னர் அது கடுமையாக உயரம் குறைந்ததாகவும் பயணிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள இஸ்ரேலிய பயணிகளை பாதுகாப்பாக மீண்டும் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலிய பயணிகளை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

குறித்த வானூர்தியில் சுமார் 180 இஸ்ரேல் நாட்டுப் பயணிகள் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

77 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

87 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளுக்குத் தடை?

எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான அரபு அரசியல் கூட்டணிகளான ‘கூட்டுப் பட்டியல்’ (Joint List), ‘ரா அம்’ (Ra’am)…

99 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்! ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் எச்சரித்துள்ளார். ‘USS Theodore Roosevelt’ விமானம் தாங்கிப்…

102 0 0