உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விரிசலுக்குப் பின் முதன்முறையான சந்தித்த UAE – சவூதி அதிகாரிகள்

உலக செய்திகள் 4 நாட்கள் முன்
118 பார்வைகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் ஜனாதிபதி ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான் நேற்று சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்து, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை சந்தித்துள்ளார்.

கடந்த ஆண்டு இரு வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஆழமான விரிசல் ஏற்பட்டதன் பின்னர், ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சவூதி அரேபியாவிற்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும்.

சவூதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் பல வாரங்களாக சவூதி அரேபியாவை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தொடர்ச்சியாக ஏவி வரும் நிலையில், ரியாத் அதிகரித்த அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச ஆதரவைத் திரட்ட சவூதி அரேபியா முயற்சித்து வருகிறது,

ஆனால் அந்த கோரிக்கை ஐக்கிய அரபு அமீரகத்திடம் முன்வைக்கப்பட்டதா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.

ஹூதிகளுக்கு எதிரான போரில் ஐக்கிய அரபு இராச்சியம் ஒருகாலத்தில் சவூதி அரேபியாவின் முக்கிய பிராந்தியப் பங்காளியாக இருந்தது.

ஷேக் மன்சூர் மற்றும் இளவரசர் காலித் ஆகியோர் பரஸ்பர ஆர்வமுள்ள தலைப்புகள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்ததாக எக்ஸ் (X) தளத்தில் சவூதி பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவிசார் அரசியல் முதல் எண்ணெய் கொள்கை வரையிலான அனைத்திலும் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியாவின் பல ஆண்டுகால கருத்து வேறுபாடுகள் டிசம்பரில் பகிரங்கமாக வெளிவந்தன.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவு பெற்ற தெற்கு ஏமன் பிரிவினைவாதக் குழுவின் முன்னேற்றம் அவர்களை சவூதி எல்லைகளுக்கு அருகில் கொண்டு வந்தபோது இந்த விரிசல் வெளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

76 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

85 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளுக்குத் தடை?

எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான அரபு அரசியல் கூட்டணிகளான ‘கூட்டுப் பட்டியல்’ (Joint List), ‘ரா அம்’ (Ra’am)…

98 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்! ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் எச்சரித்துள்ளார். ‘USS Theodore Roosevelt’ விமானம் தாங்கிப்…

101 0 0