உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தியாக தீபத்துக்காக இன்று முதல் அணையா விளக்கு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
83 பார்வைகள்

தியாக தீபம் திலீபனுக்காக இன்று புதன்கிழமை முதல் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை யாழ். நல்லூரில் ‘அணையா விளக்கு போராட்டம்’ முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலையைப் பொலிஸார் அகற்றிச் சென்றதைக் கண்டித்தும், அதனை மீள அவ்விடத்திலேயே நிறுவ வேண்டும் என வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

சிலையைப் பொலிஸார் அகற்றியதைக் கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீபனின் நினைவேந்தல் குழுவினராலும், திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமையும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நினைவாலயம் முன்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், அகற்றப்பட்ட சிலையை மீள அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இன்று புதன்கிழமை முதல் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை யாழ். நல்லூரில் ‘அணையா விளக்கு போராட்டம்’ முன்னெடுக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று மாலை 5 மணிக்கு நல்லூரில் உள்ள திலீபனின் நினைவாலயம் முன்பாக விளக்கேற்றப்பட்டு, நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை அந்த விளக்கை அணைக்காமல் இரவு பகலாகத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0