உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அல்-அக்ஸா பள்ளிவாசல் அத்துமீறலுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் கடும் கண்டனம்!

உலக செய்திகள் 4 நாட்கள் முன்
120 பார்வைகள்

இஸ்ரேலின் வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir) தலைமையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

யூதர்களின் ‘சுக்கோத்’ (Sukkot) பண்டிகையின் 3ஆவது நாளில், இடமர் பென்-க்விர் தலைமையில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்தனர்.

இந்தச் சம்பவத்தை “தூண்டுதல் நடவடிக்கை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என ஐக்கிய அரபு இராச்சியம் வர்ணித்துள்ளது.

இதேவேளை, இடமர் பென்-க்விர் ஹெப்ரோனில் உள்ள இப்ராஹிமி பள்ளிவாசலிலும் குடியேற்றவாசிகளுடன் இணைந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்-அக்ஸா வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர், “அல்-அக்ஸாவிலும் சிறைச்சாலைகளிலும் நாங்களே உரிமையாளர்கள்; பயங்கரவாதக் கைதிகளின் வாழ்க்கையை நரகமாக மாற்றியுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

76 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

85 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளுக்குத் தடை?

எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான அரபு அரசியல் கூட்டணிகளான ‘கூட்டுப் பட்டியல்’ (Joint List), ‘ரா அம்’ (Ra’am)…

98 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்! ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் எச்சரித்துள்ளார். ‘USS Theodore Roosevelt’ விமானம் தாங்கிப்…

101 0 0