கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 103ஆவது கல்லூரி தினம்.!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டு 103 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 103 ஆவது கல்லூரி தினம் கொண்டாடடப்படவுள்ளது. அத்துடன் இறுதிப் பரீட்சையில் சித்திபெற்ற 16 ஆசிரியர்களுக்கு பயிற்றப்பட்ட ஆசிரியர் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் எதிர்வரும் 01.10.2026 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
நிகழ்வில் கலாசாலையினால் வெளியிடப்படும் கலாதீபம் மின்னிதழ் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
