உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை! : இந்தியாவின் 9 துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றம்

இந்திய செய்திகள் 7 நாட்கள் முன்
133 பார்வைகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகக்கூடும் என புதுச்சேரி, காரைக்கால் உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

நேற்று வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் வானிலை மாற்றங்கள் ஏற்பட தொடங்கியுள்ளன.

இதன் எதிரொலியாக புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.

நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 9 துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

92 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

85 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

63 0 0