உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

8,000-க்கும் மேற்பட்ட வட கொரிய வீரர்கள் ரஷ்யாவில் குவிப்பு: உக்ரைன் எச்சரிக்கை!

உலக செய்திகள் 7 நாட்கள் முன்
123 பார்வைகள்


ரஷ்யப் பகுதியில் 8,000-க்கும் மேற்பட்ட வட கொரியப் படைகள் இருப்பதாகவும், மேலும் 10,000 வீரர்களை அங்கு நிலைநிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்கள்கிழமை (28) தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கு வட கொரியப் படைகளை அனுப்புவது தொடர்பான புதிய தரவுகளை சுட்டிக்காட்டிய ஜெலென்ஸ்கி, அவர்கள் பயிற்சி பெறுவதற்கும், அதைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர் என்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்காகப் போரிட 50,000 வரையிலான வட கொரிய வீரர்கள் அனுப்பப்படக்கூடும் என்று உக்ரேனிய ஜனாதிபதி ஆகஸ்ட் மாதத்தில் கூறினார்.

அத்துடன், உக்ரேனின் வான் பாதுகாப்புக்கு ஆதரவளிக்குமாறு தென் கொரியாவிற்கு அழைப்பு விடுத்தார்.

உக்ரேனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவித் தொகுப்பைத் தென் கொரியா ஜூலை மாதம் அறிவித்தது.

இருப்பினும், இதில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் சேர்க்கப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட இரண்டு வட கொரிய வீரர்களை உக்ரேன் தென் கொரியாவிடம் ஒப்படைத்துவிட்டதாக கடந்த வாரம் ஜெலென்ஸ்கி அறிவித்ததை அடுத்து, சியோலுக்கும் கீவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இந்நிலையில்தான், திங்கட்கிழமை அன்று அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த இடமாற்றத்தை இரகசியமாக வைப்பதற்கான ஒப்பந்தம் இருந்ததைச் சுட்டிக்காட்டி, அவரது அறிவிப்புக்கு சியோல் வருத்தம் தெரிவித்தது.

அத்தகைய இரகசியக் காப்பு ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று உக்ரேனிய ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட பொய்யான அறிக்கை என்று தென் கொரியாவும் எதிர்ப்புத் தெரிவித்தது.

உக்ரேனிய மற்றும் தென் கொரிய மதிப்பீடுகளின்படி, 2024 முதல் உக்ரேனில் ரஷ்யாவின் போருக்கு ஆதரவளிப்பதற்காக வட கொரியா சுமார் 14,000 முதல் 15,000 வீரர்களை அனுப்பியுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர், உக்ரேனிய ஊடுருவலை முறியடிக்க உதவுவதற்காக குர்ஸ்க் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உக்ரேனிய மற்றும் சுயாதீன மதிப்பீடுகளின்படி, பியோங்யாங் ரஷ்யாவிற்கு இலட்சக்கணக்கான பீரங்கி மற்றும் மோர்டார் குண்டுகளையும், அத்துடன் பாலிஸ்டிக் ஏவுகணைகள், நீண்ட தூர பீரங்கி அமைப்புகள் மற்றும் பல-ஏவுதல் ராக்கெட் அமைப்புகளையும் வழங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

81 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

61 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

100 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

106 0 0