உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
118 பார்வைகள்

அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ‘குஷ்’ போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு நீதிமன்றத்தினால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டவேளையில் அவரிடமிருந்து 16,150 மில்லிகிராம் ‘குஷ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சந்தேகநபர் அம்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக இப் போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அம்பாறை தலைமையக பொலிஸாரால் இத்தகைய ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்படுவது இது நான்காவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திங்கட்கிழமை (28) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து அம்பாறை பிரதம நீதிவான் உத்தரவிட்டார்.

உதவி பொலிஸ் பரிசோதகர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரில், பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி, அம்பாறை பிரிவு 1-இன் உதவி பொலிஸ் அதிகாரி சம்பத் விக்ரமரத்ன மற்றும் அம்பாறை தலைமையக பிரதம பொலிஸ் பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன ஆகியோரின் மேற்பார்வையில் இச் சுற்றிவளைப்பு இடம்பெற்றது.

இவ் அதிரடி நடவடிக்கையில் உதவி பொலிஸ் பரிசோதகர்களான செயின்ட், தம்மிக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான நந்தன (15991), சோமரத்ன (66675), குணவர்தன (73734), பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி கசுன் (92988) உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

75 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

71 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

71 0 0
அம்பாறை செய்திகள்

இரண்டு பிள்ளைகளின் தாய் உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட…

147 0 0