உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் இன்று ஆரம்பம்!

இந்திய செய்திகள் 18 மணி நேரம் முன்
110 பார்வைகள்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தில் நிதி தேவைக்கு ஏற்ப தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது.

அந்த வரிசையில் முதலமைச்சர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

அதன்படி ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் அரசு வைத்திசாலைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் தாயையும் கவுரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரச வைத்திசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையில் மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் கவனம் பெற்றது.

இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமானது தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு வைத்திசாலைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கடந்த ஜூன் 22ஆம் திகதி அறிவித்தார். அன்றைய நாளில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

முதலில் இத்திட்டத்தை தாய்மாமன் சீர் கலாசாரம் அதிகம் உள்ள உசிலம்பட்டி அரசு வைத்திசாலையில் தொடங்க திட்டமிடப்பட்டது. உசிலம்பட்டியில் தெருக்கள் குறுகலாக இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம், பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் இந்த திட்ட தொடக்க விழா மதுரை ராஜாஜி வைத்திசாலைக்கு மாற்றப்பட்டது.

அதன்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி வைத்திசாலையில் இன்று (28) நடைபெறுகிறது.

இதற்காக முதல்கட்டமாக தமிழக அரசு சார்பில் 89,955 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

மதுரையில் நடைபெறும் விழாவிற்கு முன்னேற்பாடாக 1,106 தங்க மோதிரங்கள் கடந்த வாரம் உசிலம்பட்டி அரசு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – மதுரையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலின்போது, தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அரச வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும்…

99 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் அந்நிய முதலீட்டை பெறுவதில் தமிழகம் முதலிடம்!

முதல் காலாண்டில் ரூ. 55,900 கோடி (595 கோடி டொலர்) அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்திய மத்திய தொழில் மற்றும்…

103 0 0
இந்திய செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் தொடர்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

அங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக செஸ் வீர, வீராங்கனைகளுக்குத்…

118 0 0
இந்திய செய்திகள்

சபரிமலையில் தங்கக் கிரீடம் மாயம்!

சபரிமலை கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை…

78 0 0