உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
28 திங்கள்

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒன்பது பேர் கைது

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
194 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒன்பது பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் கார் ஒன்றிலும் , இரண்டு மோட்டார் சைக்கிளிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த கும்பல் ஒன்றினை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்

அதன் போது , காரினுள் கூரிய ஆயுதங்களும் , 09 இலட்ச ரூபாய் பணமும் காணப்பட்டுள்ளது
அதனை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் 09 பேரையும் கைது செய்ததுடன் , அவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்களை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மூன்று மாதங்களுக்கான எரிபொருள் மானிய யோசனை நாளை அமைச்சரவைக்கு வருகிறது

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதற்கான அமைச்சரவைப்…

89 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றம் குறித்து அமைச்சர் சந்திரசேகரன் விளக்கம்!

திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச செயலகத்தில்…

102 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து நல்லூரில் எழுச்சிப் போராட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து, நினைவாலயத்துக்கு முன்பாக இன்று மாலை 5…

88 0 0
இலங்கை செய்திகள்

நற்பிட்டிமுனை மண்ணின் சாதனையாளர்களைக் கௌரவித்த அல்-கரீம் பவுண்டேஷன்!

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “மண்ணுக்கு மகுடம் சூட்டிய சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா” நேற்று சனிக்கிழமை (26) சவளக்கடை ரோயல் கார்டன் மண்டபத்தில் மிகச்…

81 0 0