வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!
வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறிகட்டுவான் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, வாழ்வாதார நோக்கில் பயனாளி ஒருவருக்கு கொடுத்த ஆட்டினை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆட்டின் உரிமையாளர் இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதுடன், இது குறித்து விசாரைணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.