உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

யாழில் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
74 பார்வைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே நாளில் 7 சடலங்கள் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் நான்கு மரணங்கள் உயிர்மாய்ப்பு காரணமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதற்கான அவசர முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறுகிய காலப்பகுதியில் இவ்வாறான உயிர்மாய்ப்பு சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றமை யாழ். குடாநாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இது குறித்த சமூக மற்றும் உளவியல் ரீதியான விழிப்புணர்வின் அவசியத்தை வலுவாக வலியுறுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் உயிர்மாய்ப்பு சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவர்கள் அணி ஒன்று நேற்று அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்க, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுசரணையுடன் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட விசேட உயிர்மாய்ப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் திட்டங்கள் தற்போது தீவிரமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

75 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

102 0 0