உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

இன்று வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தத் திருவிழா.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
106 பார்வைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் கற்கோவளம் வங்கக்கடலில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.

ஆலயத்தில் இடம்பெறும் விசேட பூஜைகளைத் தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமி சகிதம் பிள்ளையார், வல்லிபுரம் சுவாமி மற்றும் லட்சுமி அம்மன் ஆகியோர் வங்கக்கடல் நோக்கி எழுந்தருளிச் செல்வார்கள்.

அங்குள்ள சிற்றாலயத்தில் சுவாமிகள் அமர்ந்திருக்க விசேட பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் தீர்த்த உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெறும்.

தீர்த்த உற்சவம் நிறைவுற்றதும் சுவாமிகள் மீண்டும் கோயிலை நோக்கித் திரும்புவார்கள்.

இந்தச் சமுத்திரத் தீர்த்த உற்சவத்தில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைத் தொடர்ந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கோயில் சுற்றாடலில் உள்ள தீர்த்தக் கேணியில் பட்டுத்தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது. இதன் ஊடாக இந்த ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவம் நிறைவுபெறவுள்ளது.

இந்தத் தீர்த்தத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

75 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

102 0 0